தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ராஜாஜி சாலையை சேர்ந்தவர் முகேஷ் நாகர்ஜுனா (வயது 32). அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் ஆகவில்லை என்பதால் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த முகேஷ் நாகர்ஜுனா நேற்று முன்தினம் மாலை வீட்டில் படுக்கையறைக்கு சென்றார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் அவரது தாயார் லதா கதவை தட்டியுள்ளார் ஆனால் திறக்கவில்லை.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகேஷ் நாகர்ஜுனா அறையில் இருந்த மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை கீழே இறக்கி உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story