நெல்லையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி கேட்டு நெல்லையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை அருகே உள்ள வீரமாணிக்கப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வீரமாணிக்கபுரத்தில் விடுபட்ட வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும். மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைத்துத்தர வேண்டும். நிலமற்ற மக்களுக்கு அரசு நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஊர் நாட்டாண்மைகள் பொன்ராஜ், வைரமணி, பிரதாப் மற்றும் பொதுமக்கள் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story