நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்


நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
x

அருப்புக்கோட்டை பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது.

இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கப்படுகின்றனர். பாளையம்பட்டி மதுரை சாலை, நான்கு வழிச்சாலை செல்லும் சாலைகளில் தெரு நாய்கள் ஆக்ரோசமாக சண்டையிட்டு கொண்டு கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.

தெருநாய்கள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி விட்டு செல்வதும் வழக்கமாகி விட்டது.

தெருநாய்களை கண்டு வீதியில் நடந்து செல்ல பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story