கள்ளக்குறிச்சியில் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் - பா.ஜ.க. சார்பில் நடந்தது


கள்ளக்குறிச்சியில் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் - பா.ஜ.க. சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:55 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. சார்பில் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் பா.ஜ.க. சார்பில், மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல்.செல்வநாயகம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெயதுரை, முருகன், மாவட்ட பொருளாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

மாநில பொதுச்செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கார்த்தியாயினி, சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர்இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேசினார்.

மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டு கால காலத்தில் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன் உதாரணமாக ஆட்சி செய்து வருகிறார். இந்தியா ஒரு வளரும் நாடாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், சமையல் எரிவாயு வழங்குதல், விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்த வருகிறார் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சர்தார்சிங், கஜேந்திரன், மாவட்ட செயலாளர் மில்.ஹரி, மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற சக்திகேந்திரா, பொறுப்பாளர் பழனிவேல்சாமி, மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம், நிர்வாகி சங்கர சுப்பிரமணி உள்பட மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story