ஆரணி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை நோட்டீசு - நகராட்சி தலைவரிடம் முறையீடு


ஆரணி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை நோட்டீசு - நகராட்சி தலைவரிடம் முறையீடு
x

ஆரணி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை நோட்டீசு வழங்கி வருகின்றனர்.

சென்னை

பொன்னேரி நகராட்சி வழியாக ஆரணி ஆறு செல்கிறது. இந்த நிலையில் ஆரணி ஆற்றங்கரையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து குடிசை மற்றும் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். இது குறித்து தொடரபட்ட வழக்கில் கோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் ஆரணியாறு வடிநில கோட்டத்தின் பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் கட்டிய 317 குடியிருப்பு வாசிகளுக்கு 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீசு வழங்கி வருகின்றனர். இந்த பணியில் உதவி பொறியாளர் பாலசுந்தரம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம்விஸ்வநாதன், நகராட்சி கவுன்சிலர்களிடம் முறையிட்டனர். அப்போது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் நாங்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்த நிலையில் அதிகாரிகளை சந்தித்து பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story