சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது - ராமதாஸ்


சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது - ராமதாஸ்
x
தினத்தந்தி 21 Dec 2023 9:25 AM GMT (Updated: 21 Dec 2023 9:30 AM GMT)

இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. ஐகோர்ட்டின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story