ரயில்வே குரூப் டி தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்


ரயில்வே குரூப் டி தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 Sept 2022 1:18 PM IST (Updated: 5 Sept 2022 1:21 PM IST)
t-max-icont-min-icon

ரயில்வே குரூப் டி தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் ரயில்வே குரூப் 'டி' தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரயில்வே குரூப் டி தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்; தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும்; மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது.

மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story