தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story