ராமநாதபுரம்: கோடை மழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு


x

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல ஊர்களில் நல்ல மழை பெய்துள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல ஊர்களில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தேவிபட்டினம்,கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, மங்கலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

கோடை மழையால் தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரி மடம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பாத்திகள் முழுவதும் அதிக அளவில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கல் உப்புகளும் மழை நீரில் கரைந்து ஓடுகின்றன. கோடை மழையால் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளும் அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story