நிலம் வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் தரகர் கைது


நிலம் வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் தரகர் கைது
x

மயிலாப்பூரில் நிலம் வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை

சென்னை,

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் ரவி. தொழில் அதிபரான இவரிடம், நிலம் வாங்கி தருவதாக, கிருஷ்ணகுமார் (வயது 46) என்பவர் ரூ.35 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. நிலத்தை வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல், கிருஷ்ணகுமார் ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. ரூ.35 லட்சத்தையும் ஏப்பம் விட்ட கிருஷ்ணகுமார் ரியல் எஸ்டேட் தரகர் தொழில் செய்பவர். சோழிங்க நல்லூரைச்சேர்ந்தவர் ஆவார்.

இவர் மீது ரவி, மயிலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். பணத்தை திருப்பித்தர கோர்ட்டும், கிருஷ்ணகுமாருக்கு உத்தரவிட்டது. ஆனால் அதன்படி கிருஷ்ணகுமார் நடக்கவில்லை. இதனால் அவர் மீது மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார்.


Next Story