காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலங்களை கே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து, விவசாய நிலமாக மாற்றி பயிரிட்டு வந்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலங்களை கே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் கையகப்படுத்தி ஆக்கிரமிப்பு பலகைகளை வைத்தனர். ஆக்கிரமிப்பு பணிகளின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.


Next Story