நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மறுப்பதா? - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கண்டனம்
நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர் 'நீட்' தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அந்த கேள்விகளுக்கு கவர்னர் ரவி பதிலளிக்கும்போது, நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதாவை கையெழுத்து இட்டு, ஜனாதிபதிக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின்படி கவர்னருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித்தனமாக கவர்னர் பேசிவருவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story