வேலூரில் முற்றுகை போராட்டம் நடத்தி சிறை சென்ற பா.ஜ.க.வினர் விடுதலை - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


வேலூரில் முற்றுகை போராட்டம் நடத்தி சிறை சென்ற பா.ஜ.க.வினர் விடுதலை - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x

சிறையில் இருந்து வெளியே வந்த பா.ஜ.க.வினருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூரில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 100-க்கும் மேற்பட்டவர்களை கடந்த வாரம் போலீசார் கைது செய்து அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவருக்கும் சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று சிறையில் இருந்து வெளியே வந்த பா.ஜ.க.வினரை, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் மற்றும் மாநில செயலாளர் கார்த்தியாயினி உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். சிறையில் இருந்து விடுதலையான பா.ஜ.க.வினருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story