தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள், சாலைகளை சீரமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள், சாலைகளை சீரமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x

தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள், சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஆற்றுப்பாலம் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்லும்போது தாலாட்டுவதுபோல ஆடியது. விபத்து அச்சத்துடனேயே இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் பரிதாப நிலை நீடித்தது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வைரலான பிறகுதான், அதிகாரிகள் ஆற, அமர நடவடிக்கை எடுக்கின்றனர். பாலத்தை தொடர்ந்து பராமரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தற்போதும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்காமல், மக்களின் பாதுகாப்பை நினைவில்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

இதேபோல, தமிழ்நாடு முழுவதும் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், மிகவும் மோசமான நிலையில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, அவற்றை உடனடியாக சீரமைக்கவேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story