நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தங்கள் கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தார்.
சென்னை,
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையார் பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தங்கள் கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தார்.
தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜோயல் சுந்தர் சிங், மருது சேனை அமைப்பின் நிறுவன தலைவர் ஆதி நாராயணன், அகில இந்திய வன்னியர் குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் முத்துசாமி, அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சியின் அகில இந்திய தலைவர் குமர தேசிகன் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு தங்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story