கலெக்டரிடம் கோரிக்கை மனு


கலெக்டரிடம் கோரிக்கை மனு
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் நேற்று புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், மணவூர் 13-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருமான ஜி.மகா தலைமையில், மணவூர் ஊராட்சி மன்ற தலைவர் அல்லியம்மாள் துரைராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகாதேவி நந்தகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மணவூர் ஊராட்சி மன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக ஊராட்சிமன்ற அலுவலகம் வேறொரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே விரைவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மணவூர் காபுல் கண்டிகை, மேட்டு காலனி, பள்ளக்காலனி போன்ற பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளதால் அனைவருக்கும் பயன்படும் வகையில் அங்கு புதிய சமுதாய கூடம் கட்டி தரவேண்டும் என்று மனு அளித்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

1 More update

Next Story