தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டுகோள்


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டுகோள்
x

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 7-வது மாவட்ட மாநாடு திருச்சி, முதலியார்சத்திரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் பழனியப்பன், மாநில அமைப்பாளர் ஜம்ரூத்நிஷா, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


Next Story