சினிமா ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளப்பட்ட 17 வயது சிறுமி


சினிமா ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளப்பட்ட 17 வயது சிறுமி
x
தினத்தந்தி 5 April 2024 6:50 AM IST (Updated: 5 April 2024 6:58 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை விபசாரத்தில் தள்ளியதாக 56 வயது பெண் தரகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட அந்த வீட்டில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு விபசாரம் நடப்பதும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது.

இதை பார்த்து, விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா ஆசை காட்டி அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த சிறுமி போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டார். அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த சிறுமியை விபசாரத்தில் தள்ளியதாக 56 வயது பெண் தரகர் கைது செய்யப்பட்டார்.


Next Story