'மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா? விமர்சித்தால் கலவரம் தானே வரும்' - கே.எஸ். அழகிரி


மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா? விமர்சித்தால் கலவரம் தானே வரும் - கே.எஸ். அழகிரி
x
தினத்தந்தி 29 Jun 2022 5:08 AM GMT (Updated: 29 Jun 2022 5:09 AM GMT)

நுபுர் சர்மா விவவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

சிதம்பரம்,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நுபுர் சர்மா, அதிமுக உட்கட்சி பூசல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய கே.எஸ்.அழகிரி, 'முகமது நபியை (இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர்) பற்றி அந்த மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா? அப்படி விமர்சித்தால் கலவரம் தானே வரும். அப்படி விமர்சித்தால் மக்களுக்கு கருத்து வேறுபாடுதானே வரும். அப்படி விமர்சித்தால் மக்கள் இரண்டாக பிளவுபட்டுதானே நிற்பார்கள். அதுதான் அவர்களின் (பாஜக) நோக்கம். மேலும் ஒரு குஜராத் கலவரத்தை உருவாக்கவேண்டுமென்பது தான் அவர்களின் (பாஜக) நோக்கம்.

அதிமுக பாஜகவின் அடிமை கட்சியாக மாறிவிட்டனர். நாங்கள் அதை கூறியபோது நீங்கள் அரசியலுக்காக கூறுகிறார்கள் என்றார்கள். ஆனால், பிரதம மந்திரி கூறியதால் தான் நான் துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டேனே தவிர இல்லையே பதவியை ஏற்றிருக்கமாட்டேன் என ஓ.பன்னீர் செல்வம் சமீபத்தில் கூறியுள்ளார்' என்றார்.



Next Story