குண்டர் சட்டத்தில் ரவுடி சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் ரவுடி சிறையில் அடைப்பு
x

திருவள்ளூர் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 24). இவரை கடந்த 11-ந் தேதி மணவாளநகர் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மணவாளநகர் போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.


Next Story