பழனி கோவிலில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 ½ லட்சம் மோசடி


பழனி கோவிலில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 ½ லட்சம் மோசடி
x

பழனி கோவிலில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 ½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை வடக்குத்தெருவை சேர்ந்தவர் போஸ் என்பவரின் மகன் கணேசமூர்த்தி (வயது 25). இவரது வீட்டின் அருகில் குடியிருந்து வரும் விக்னேஷ் என்பவர் தனக்கு தெரிந்த திண்டுக்கல் கசவனம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் அர்ஜூன்பாண்டி(30) என்பவர் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பழனி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கணேசமூர்த்தி மேற்கண்ட அர்ஜுன்பாண்டி கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 650 பணம் பெற்றுக்கொண்டார்களாம். இந்த பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து வந்தார்களாம்.

இதுகுறித்து கேட்டபோது மேற்கண்ட அர்ஜுன்பாண்டி ரூ.7ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணேசமூர்த்தி இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார்.

அவரின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் வழக்குபதிவு செய்து அர்ஜுன்பாண்டியை தேடிவருகிறார்.


Next Story