கனமழையால் பாதிக்கப்பட்ட கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி - ஆய்வு கூட்டத்தில் முடிவு


கனமழையால் பாதிக்கப்பட்ட கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி - ஆய்வு கூட்டத்தில் முடிவு
x

வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

சென்னை,

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கனமழையால் பல்வேறு கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்ட கோவில்களின் சேத விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது 26 கோவில்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே சேதமடைந்த கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story