ரூ.6,000 வெள்ள நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்


ரூ.6,000 வெள்ள நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 15 Dec 2023 11:04 AM GMT (Updated: 15 Dec 2023 11:18 AM GMT)

மிக்ஜம் புயல் காரணமாக 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகளில் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்ட தமிழக அரசு, டோக்கன்களை விநியோகிக்கும் பணியையும் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை நாளை மறுநாள் சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story