போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 26 Jun 2023 7:30 PM GMT (Updated: 26 Jun 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக வந்தனர். இதனிடையே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக ஆடுகள் விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இவற்றை வியாபாரிகள் போட்டு போட்டு வாங்கினர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story