தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால்தக்காளி விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு1 கிலோ ரூ.90-க்கு விற்பனை


தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால்தக்காளி விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு1 கிலோ ரூ.90-க்கு விற்பனை
x
தினத்தந்தி 1 July 2023 7:30 PM GMT (Updated: 1 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரே நாளில் ரூ.20 விலை உயர்ந்தது. நேற்று 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையானது.

தக்காளி சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, கோவை ஆகிய பகுதிகளுக்கு தினமும் லாரிகள் மூலம் தக்காளி அனுப்பப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை சராசரி அளவைவிட அதிகமாக பெய்ததால் தக்காளி சாகுபடி அதிகரித்தது. அப்போது விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. 1 கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் தக்காளி சாகுபடி குறைந்தது.

ரூ.90-க்கு விற்பனை

இந்தநிலையில் கடந்த சில வாரங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்தும் தற்போது குறைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.70- க்கு விற்பனையான தக்காளி ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.20 விலை உயர்ந்தது.

தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனையானது. தக்காளி விலை மீண்டும் உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story