வேதாரண்யம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பு..!


வேதாரண்யம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பு..!
x
தினத்தந்தி 29 Aug 2022 9:23 AM GMT (Updated: 29 Aug 2022 9:25 AM GMT)

வேதாரண்யத்தில் இருந்து உப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரெயிலில் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இங்கு நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு உப்பானது ரெயில் மற்றும் லாரிகளில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் பள்ளி திருத்துறைப்பூண்டி ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இவ்வழியில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் வேதாரண்யத்தில் இருந்து லாரிகள் மூலம் மட்டுமே உப்பு அனுப்பி வைக்கப்பட்டப்படுகிறது.

இந்நிலையில் வேதாரணியத்தில் உள்ள உப்பு உற்பத்தி நிறுவனம் ஒன்றிலிருந்து தொழிற்சாலை உப்பு நாகைக்கு கொண்டு செல்லபட்டு, அங்கிருந்து 54 வேகன்களை கொண்ட சரக்கு ரயில் மூலம் 3600 டன் உப்பை ஆந்திர மாநிலத்தில் உள்ள வேல் துருத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே வேகன் மூலம் நடைபெற்ற உப்பு ஏற்றுமதி ஆகும்

அகல ரெயில்பாதை விரைந்து முடிக்கபட்டால் அகஸ்தியன் பள்ளியில் இருந்து தொடர்ந்து ரெயில்வே வேகன் மூலம் உப்பு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் ரெயில்வே துறைக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆறு லட்சம் டன் உப்பு லாரி மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதால் விலைகள் உயர்ந்து காணப்படுகிறது.


Next Story