தீரன் சின்னமலைக்கு புகழ் வணக்கம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


தீரன் சின்னமலைக்கு புகழ் வணக்கம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

தன்மானத்தை விட்டுக்கொடுக்காத தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

"தாயகத்தின் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது, தன்னுரிமை மிதித்துத் துவைக்கப்படும்போது, "சின்னமலை வரிதரமாட்டான்!ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டான்!" என முழங்கி, உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!"

என்று கூறியுள்ளார்.


1 More update

Next Story