அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை


அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகார்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லூர் மற்றும் ராமநாதபுரம் தாலுகா தேவிபட்டிணம், முத்துரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

அதையடுத்து புல்லூர் ஊராட்சியில் அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டர் டிரைவர், உரிமையாளர் மீது போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தேவிபட்டினம், முத்து ரெகுநாதபுரம் பகுதியில் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்ட பொழுது அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு

மேலும் மாவட்டம் முழுவதும் தாசில்தார்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனுமதியின்றி எந்தப் பகுதிகளிலாவது மணல் மற்றும் வண்டல் மண் எடுத்தால் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.


Next Story