மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணி நடைபெற்றது.

மதுரை


மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், காந்தி ஜெயந் தியையொட்டி மதுரை மருத்துவக் கல்லூரியின் செவிலிய கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் மதுரை லேடி டோக் கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் தூய்மைப்பணி நடந்தது. இந்த தூய்மைப்பணியை, மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரும், அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தொடங்கி வைத்து, தூய்மைப்பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை அதிகாரிகள், என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, என்.சி.சி. அதிகாரிகள் சாந்திமீனா மற்றும் செல்வராஜன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக, என்.சி.சி. மாணவர்கள் சார்பில், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகளுக்கு, காந்தியின் சிறப்புகள் குறித்தும், தூய்மை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story
  • chat