பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து


பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 28 Sept 2023 2:30 AM IST (Updated: 28 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை அழைத்து வர சென்ற போது பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பஸ் ஒன்று, நேற்று கீழ்கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சம்பத் ஓட்டினார்.

அவர் தேனாடு ஹட்டி அருகே பஸ்சை நிறுத்தி குழந்தைகளை ஏற்றுவதற்காக காத்திருந்தார். அப்போது திடீரென பஸ் பின்னோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பிரேக் பிடிக்க முயற்சித்தார். இருப்பினும், பஸ் அருகில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பத்துக்கு காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கீழ் கோத்தகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி, பள்ளியின் மாற்று பஸ்சை வரவழைத்து, அதில் பள்ளி குழந்தைகளை அனுப்பி வைத்தார். பின்னர் கிரேன் மூலம் பள்ளி பஸ் மீட்கப்பட்டது. பள்ளி பஸ் விபத்துக்கு உள்ளான போது குழந்தைகள் வாகனத்திற்குள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story