தேவிப்பட்டினத்தில் திடீரென உள்வாங்கிய கடல்; நவபாஷாண கோவிலில் உள்ள நவக்கிரகம் வெளியே தெரிந்தன - வீடியோ
ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் வழக்கத்திற்கு மாறாக இன்று கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கியதால் தேவிப்பட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் முழுவதும் தெளிவாக வெளியே தெரிந்தன.
இதையடுத்து, அங்கு பரிகார பூஜை செய்ய வந்த பக்தர்கள் 9 நவக்கிரகங்களையும் சுற்றி வந்தபடி மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர். அதேபோல், கோவிலை ஒட்டிய பகுதியிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடற்கரை பகுதி முழுவதும் மணல் பரப்பாகவே இருந்தது.
இந்து மதக்கடவுள் ராமபிரானால் பூஜை செய்து பரிகார பூஜை செய்யப்பட்டது தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story