திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு ‘சீல்' வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை

திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகர் 2-வது தெருவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் முறையான அனுமதி இன்றி சம்பத் என்பவர் வீடு கட்டி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அதில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் முறையான அனுமதியின்றி கட்டிடம் கட்டி வருவது உறுதியானது. மேலும் கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடமும் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று அந்த கட்டிடத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.


Next Story