பள்ளிகளில் பேட்ஜ் அணிந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்


பள்ளிகளில் பேட்ஜ் அணிந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
x

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி பள்ளிகளில் பேட்ஜ் அணிந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை பேட்ஜ் அணிந்து பள்ளிகளில் பணிபுரிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் சங்ககிரி ஒன்றியம் காவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று கோரிக்கை அடங்கிய பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நேற்று அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். வருகிற 28-ந் தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பேச்சியம்மாள், கணேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story