திருத்தணி அருகே போதைப்பொருட்கள் விற்பனை; 4 பேர் கைது


திருத்தணி அருகே போதைப்பொருட்கள் விற்பனை; 4 பேர் கைது
x

திருத்தணி அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி பகுதியில் போதைப்பெருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது திருத்தணி- அரக்கோணம் சாலையில் சரஸ்வதி நகர் பஸ் நிலையம் அருகே போதைப்பொருளை விற்பனை செய்த அரக்கோணம் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்த சிவகுரு (வயது 45), மத்தூர் கிராமத்தில் பெட்டிகடைகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மணிவாசகம் (36), ரவி (36), முருக்கம்பட்டு பஸ் நிலையம் அருகே போதைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்த மணிவேல் (35), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story