நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
x

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காலியாக உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் (மெட்ராஸ் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்) துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அவர்களும் தமிழ் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். துணை வேந்தர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால் பொதுமக்களுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story