செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி விசாரணை தொடக்கம்


செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி விசாரணை தொடக்கம்
x

செந்தில் பாலாஜி வழக்கில் தற்போது 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை தொடங்கியுள்ளது.

சென்னை,

செந்தில் பாலாஜி வழக்கு மீதான விசாரணையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று 3-வது நீதிபதி விசாரணை தொடங்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை காவல் காலமாக கருத முடியாது என அமலாக்கத்துறை கோரியிருந்தது.

இந்த நிலையில் தற்போது 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் உள்ளதா? ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.


Next Story