செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம் - அமலாக்கத்துறை


செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம் - அமலாக்கத்துறை
x

கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கரூரில் கடந்த 3-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Next Story