ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி.... பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் !


ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி.... பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் !
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தென்காசி,

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

இதில், பொது வினியோக திட்டத்திற்கான தனி துறை உருவாக்கப்பட வேண்டும், தரமற்ற பொருட்களுக்காக ரேஷன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7,8,9 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.


Next Story