'புகழுக்கு முதல் ஆளாக வரக்கூடிய பிரதமர் ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டாமா?' - தயாநிதி மாறன் எம்.பி.


புகழுக்கு முதல் ஆளாக வரக்கூடிய பிரதமர் ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டாமா? - தயாநிதி மாறன் எம்.பி.
x
தினத்தந்தி 4 Jun 2023 7:11 PM GMT (Updated: 4 Jun 2023 8:50 PM GMT)

எல்லா புகழும் தனக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் ஆளாக வந்து நிற்பதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழக அரசு சிறப்பு ரயில் மூலம் தமிழகம் கொண்டு வந்தது.

இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றிருக்க வேண்டாமா என தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "பெயரையும், புகழையும் வாங்க வேண்டும், வந்தே பாரத் ரெயிலை தான் மட்டும் கொடியசைத்து தொடக்கி வைக்க வேண்டும் என எல்லா புகழுக்கும் முதல் ஆளாக வந்து நிற்கும் பிரதமர் மோடி, ஒடிசா ரெயில் விபத்துக்கும் பொறுப்பேற்றிருக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பினார்.




Next Story