சிக்கிம் வெள்ள பாதிப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


சிக்கிம் வெள்ள பாதிப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 5 Oct 2023 4:25 PM GMT (Updated: 5 Oct 2023 4:53 PM GMT)

சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்றுமுன் தினம் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது. 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 23 ராணுவ வீரர்களில் ஒரு ராணுவ வீரர் இன்று அதிகாலை மீட்கப்பட்டார். மற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டவர்களில் 102 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிக்கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

சிக்கிமில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் எண்ணங்கள் காணாமல் போன பொதுமக்கள் மற்றும் துணிச்சலான இராணுவ வீரர்களிடம் உள்ளன. தேவைப்படுபவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க ஒன்றிணைவோம். இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story