ஆட்டோவில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்


ஆட்டோவில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
x

மயிலம் அருகே ஆட்டோவில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர்கள் 2 பேர் கைது

விழுப்புரம்

மயிலம்

வெளியனூர்-மயிலம் சாலையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது உள்ளே ஏராளமான சாக்குமூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் விஜி(வயது 36), மொளசூர் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் அஜித்(21) என்பதும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர்கள் வெளியனூரில் இருந்து திண்டிவனத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்லும்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 400 கிலோ ரேஷன் அரிசியுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story