ரேசன் அரிசி கடத்தல்; கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தகவல் கொடுக்கலாம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்


ரேசன் அரிசி கடத்தல்; கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தகவல் கொடுக்கலாம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
x

ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தகவல் கொடுக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர், ரேசன் அரிசி கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை புலனாய்வு செய்து கடத்தலுக்கு முன்பே அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொது விநியோக திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தால் தான் அரிசி கடத்தலை முழுவதுமாக தடுக்க முடியும் என்று அவர் கூறினார். மேலும் ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1800-425-5901 மூலம் தகவல் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story