மண் கடத்தல்;5 பேர் கைது
சின்னசேலம் அருகே மண் கடத்தல் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே புக்கிரவாரி ஏரியில் மண் கடத்தப்படுவதாக கீழ்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் புக்கிரவாரி ஏரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் மண் கடத்திக்கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புக்கிரவாரியை சேர்ந்த ரமேஷ் (வயது 32), மோகன் (43), கீழ் நாரியப்பனூர் கிழக்கு காட்டுக்கொட்டாயை பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (37), வரதப்பனூர் கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த வெங்கடேசன் (35), திம்மாபுரம் வேலன் (21) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.