சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்க வேண்டும்


சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 8 July 2023 9:33 PM IST (Updated: 9 July 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர்

சுழலும் சொல்லரங்கம்

தி.மு.க. திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சுழலும் சொல்லரங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். நான் வரவேற்று பேசுகிறேன். துணை செயலாளர் பி.ஆர்.செந்தில்குமார், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு கொறடா கோவி.செழியன் நடுவராக கொண்டு, திராவிடத்தின் திசைகாட்டி என்ற தலைப்பில் தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, ஈடில்லா போராளி என்ற தலைப்பில் கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி, எழுத்தாளர்-பேச்சாளர் என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், சாதனை தலைவர் என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா ஆகியோர் பேசுகிறார்கள்.

திரளானோர் பங்கேற்க அழைப்பு

மேயர் தினேஷ்குமார், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, நல்லூர் பகுதி செயலாளர் பழனிசாமி, கருவம்பாளையம் பகுதி செயலாளர் அய்யப்பன் ஆகியோர் பேசுகிறார்கள். இதில் பகுதி செயலாளர்கள் ராமதாஸ், நாகராஜ், ஜோதி, சம்பத்குமார், உசேன், முருகசாமி, கோவிந்தராஜ், குமார், மாவட்ட இளைஞரணி நிர்வாகி திலகராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் தலைவர் ரத்தினசாமி, தெற்கு மாநகர அமைப்பாளர் ஆனந்த், 52-வது வட்ட செயலாளர் நந்தகோபால் பங்கேற்கிறார்கள். சுழலும் சொல்லரங்க நிகழ்ச்சிக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story