மோட்டார் சைக்கிள் விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிள் விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழப்பு
x

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு

திருப்போரூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது அக்கா சித்ரா, மாமா வெங்கடேஷன்,இவர்களது மகன் நிஷாந்த்(வயது 15). தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.வாயலூரில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு திருப்போரூர் நோக்கி நால்வரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த நால்வரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங் மீது அமர்ந்திருந்த நிஷாந்த் தலை முறிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழந்ததை பார்த்த அவர்கள் கதறி அழுதனர் .இது அருகிலிருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரே பைக்கில் நான்கு பேர் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,மேலும் ஹெல்மெட் அணியாதது தான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தனர் .மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story