சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

பட்டா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்திட உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

சென்னை,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் - அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பிலான ஓர் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், வருவாய்த்துறை, வீட்டு வசதித்துறை, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் , அலுவலர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினோம்.

இந்தக்கூட்டத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகள் பெறப்பட்டன. இந்த கருத்துகளின் அடிப்படையிலான அறிக்கையை முதல்-அமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வேண்டி காத்திருக்கும் பொதுமக்களுக்கு விரைவில் பட்டா வழங்குவதற்கான தொடக்கப்புள்ளியாக இக்கூட்டம் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.


Next Story