தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்


தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்
x
தினத்தந்தி 23 Jan 2024 9:59 AM GMT (Updated: 23 Jan 2024 10:26 AM GMT)

பயணிகள் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை ,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

வருகிற 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி தைப்பூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது .

மேலும் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படுகின்றன.

இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவேபயணிகள் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story