வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துவருகிறது.

அதன்படி, வருகிற 28-ந்தேதி மிலாடி நபி, வார விடுமுறை மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால், வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், பயணிகளின் வசதிக்காக இந்த நாட்களில்1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள், மிலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு 27ம் தேதி கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கூடுதல் பேருந்துகளை பயன்படுத்தி பயணிகள் சிரமமின்றி திட்டமிட்டபடி பயணிக்க உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story