புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்


புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 28 March 2024 2:08 AM GMT (Updated: 28 March 2024 12:29 PM GMT)

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 605 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை,

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 605 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 30-ந்தேதி வரை 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story