சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன.

சென்னை,

கார்த்திகை மாதத்தில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் வசதிக்காக சிறப்பு பேருத்துங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (நவ.16) முதல் ஜனவரி 16 வரையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன. 27.12.2023 முதல் 30.12.2023 வரை சபரிமலை நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. அதே போல மொத்தமாக குழுவாக செல்லும் பக்தர்களுக்கு அரசு சிறப்பு பேருந்து வாடகைக்கும் விடப்படும்." என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story